1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Star movie making glimpse releasing today

கவின் நடிக்கும் ஸ்டார் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

ஸ்டார்
டாடா படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் கவின் கவனிக்கப்படும் ஒரு நடிகராகியுள்ளார். இப்போது அவர் நான்குக்கும் மேற்பட்ட படங்களில் நடிக்கிறார். இந்நிலையில் ஸ்டார் படத்தை டாடா கவின் நடிப்பில் உருவாக்கி வருகிறார் இயக்குனர் இளன்.

இந்த படத்தை நித்தம் ஒரு வானம் படத்தை தயாரித்த ரைஸ் ஈஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. ஆனால் இப்போது படத்தின் பணிகள் நிறைவடையாத காரணத்தால் இந்த படம் மார்ச் மாதத்துக்கு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இன்று மாலை இந்த படத்தின் மேக்கிங் கிளிம்ப்ஸ் வீடியோவை இணையத்தில் வெளியிட உள்ளதாக படத்தைத் தயாரிக்கும் ரைஸ் ஈஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
மலையாள சினிமாவில் அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ்!