வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2024 (08:33 IST)

ரூ.20 லட்சம் வாடகை பாக்கி... யுவன்சங்கர் ராஜா மீது ஹவுஸ் ஓனர் புகார்..!

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா 20 லட்ச ரூபாய் வாடகை பாக்கி வைத்திருப்பதாக கூறி அவர் வீட்டை காலி செய்ய வேண்டும் என சென்னை போலீஸில்  புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லேக் ஏரியாவில் வாடகைக்கு இருந்து வரும் நிலையில் அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வீட்டின் ஓனர் அஜ்மத் பேகம் என்பவர் அளித்த புகாரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக யுவன் சங்கர் ராஜா வாடகை தரவில்லை என்றும் வாடகையின் மதிப்பு 20 லட்சம் என்றும் வாடகை தனது சகோதரி கேட்கும் போதெல்லாம் அவர் தர மறுத்துள்ளார் என்றும் கூறியுள்ளார்.

வாடகை பணம் கேட்டு போன் செய்த போது அவர் செல்போனை எடுக்கவில்லை என்றும் அது மட்டுமின்றி எந்தவித தகவலும் சொல்லாமல் வீட்டில் உள்ள பொருளை எடுத்துக் கொண்டு காலி செய்து விட்டதாகவும் அவர் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தற்போது யுவன் சங்கர் ராஜா தரப்பிலிருந்து எந்த விளக்கமும் வெளியாகவில்லை என்பதும் கூறப்படுகிறது


Edited by Siva