வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (11:08 IST)

நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் வீட்டில் மாமியார்-மருமகள் குடுமிப்பிடி சண்டை!

நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் வீட்டில் மாமியார்-மருமகள் குடுமிப்பிடி சண்டை!
பழம்பெரும் இலட்சிய நடிகர் எஸ்எஸ் ராஜேந்திரன் மகள் மற்றும் அவரது மாமியார் குடுமிப்பிடி சண்டை போட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
எம்ஜிஆர் சிவாஜி கணேசன் காலத்தில் லட்சிய நடிகர் என்று புகழ் பெற்று கம்பீரமான குரல் நடித்தவர் எஸ்எஸ் ராஜேந்திரன் என்பது அனைவரும் அறிந்ததே. 
 
இந்த நிலையில் எஸ்எஸ் ராஜேந்திரன் மகள் லட்சுமி மற்றும் அவரது மாமியார் ஆகிய இருவரும் நேற்று தங்களது வீட்டிற்கு காவலாளியை நியமிப்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை போட்டதாகவும் வாக்குவாதமாக நடந்த இந்த சண்டை அதன்பிறகு குடுமிப்பிடி சண்டையாக மாறி விட்டதாகவும் கூறப்படுகிறது 
 
இதனை அடுத்து எஸ்எஸ் ராஜேந்திரன் மகள் மற்றும் அவருடைய மாமியார் ஆகிய இருவரும் ஒருவர் மீது ஒருவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் இந்த 2 புகார்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.