வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 12 ஜூலை 2023 (07:40 IST)

பாண்டியர்கள், சோழர்கள், நாயக்கர்களின் கட்டடக்கலை மெய்சிலிர்க்க வைக்கிறது… தமிழ்நாடு கோயில்கள் பற்றி ராஜமௌலி ட்வீட்!

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு ரிலீஸான திரைப்படம் ஆர் ஆர் ஆர். சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் அமைந்த கதைக்களத்தில் இரு வரலாற்று பாத்திரங்களை கற்பனையாக ஒன்றிணைத்து இந்த படத்தை ராஜமௌலி உருவாக்கி இருந்தார்.

இப்போது தன்னுடைய அடுத்த படத்துக்கான வேலைகளில் பிஸியாக இருக்கும் ராஜமௌலி தமிழ்நாடு கோயில்களுக்கு குடும்பத்தோடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழ்நாட்டு கோயில்களின் கட்டடக்கலை பற்றி வியந்து அவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் சிலாகித்துள்ளார்.

அதில் “நீண்ட நாள் ஆசையான தமிழ்நாடு மத்தியப் பகுதி கோயிலுக்கு செல்லவேண்டும் என்ற ஆசை நிறைவேறியது. ஜூனில் ஸ்ரீரங்கம், தாராசுரம், பிரகதீஸ்வரர் கோயில், ராமேஸ்வரம், கானாடுகாத்தான், தூத்துக்குடி, மதுரை ஆகிய இடங்களுக்குச் சென்றிருந்தோம். சோழர்கள், பாண்டியர்கள், நாயக்கர்கள் மற்றும் மேலும் பல ஆட்சியாளர்களின் ஆழமான மற்றும் நேர்த்தியான கட்டிடக் கலை மெய் சிலிர்க்க வைக்கிறது” என ட்வீட் செய்துள்ளார்.