வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 14 ஜனவரி 2023 (10:35 IST)

கடைசியா கடவுளை தரிசிச்சுட்டேன்! – ஸ்பீல்பெர்கை கண்ட மகிழ்ச்சியில் ராஜமௌலி!

Rajamouli
ஆர்.ஆர்.ஆர் படத்திற்காக பல்வேறு விருது நிகழ்ச்சிகளுக்கு சென்றுள்ள இயக்குனர் ராஜமெலி ஹாலிவுட் இயக்குனர் ஸ்பீல்பெர்கை சந்தித்துள்ளார்.

உலகம் முழுவதும் புகழ்பெற்ற ஆஸ்கர் விருந்து எனப்படும் அகாடமி விருதுகளுக்கான திரைப்பட தேர்வு நடந்து வருகிறது. இந்த ஆண்டிற்கான 95வது அகாடமி விருதுகளுக்கான திரைப்படங்களில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படமும் பல்வேறு பிரிவுகளில் தீவிரமாக போட்டியிட்டு வருகிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த கோல்டன் க்ளோப் விருது விழாவில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு சிறந்த பாடலுக்கான விருது கிடைத்தது. அதை தொடர்ந்து ஆஸ்கரிலும் விருது கிடைக்கும் என்ற உறுதியோடு படக்குழுவினர் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் ராஜமௌலி சமீபத்தில் புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்கை சந்தித்துள்ளார். ஜுராசிக் பார்க், ஷிண்டர்ஸ் லிஸ்ட் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இந்தியாவில் பல திரைப்பட இயக்குனர்களுக்கும் விருப்பமானவராக உள்ளார்.

அவரை சந்தித்து அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராஜமௌலி “இறுதியாக கடவுளை சந்தித்துவிட்டேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Edit by Prasanth.K