தேனாண்டாள் பிலிம்ஸ் புதிய படம்: இன்று டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக்!
பிரபல தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் விஜய் நடித்த மெர்சல் என்ற திரைப்படத்தை தயாரித்த பின்னர் வேறு படங்களை தயாரிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது
மெர்சல் படத்தால் தேனாண்டாள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டம் என்றும் அதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்கள் தயாரிக்கவில்லை என்று கூறப்பட்டது
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தற்போது புதிய திரைப்படம் ஒன்றை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க முடிவு செய்து உள்ளது. இதனை அடுத்து தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ள இந்த படத்தின் முழு விபரங்களை இன்று மாலை 6 மணிக்கு பார்ப்போம்.