செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Abi)
Last Updated : ஞாயிறு, 10 செப்டம்பர் 2017 (14:55 IST)

“ஹேர் ஸ்டைல் வேணும்னா சினேகன் மாதிரி இருக்கலாம்… ஆனா, மனசு ஓவியா மாதிரி”

‘ஹேர் ஸ்டைல் வேணும்னா சினேகன் மாதிரி இருக்கலாம்… ஆனா, மனசு ஓவியா மாதிரி’ என எஸ்.ஜே.சூர்யாவைக் குறிப்பிட்டார் காமெடியன் சதீஷ்.


 

 
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்துள்ள ‘ஸ்பைடர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று சென்னையில் நடைபெற்றது. விழாவைத் தொகுத்து வழங்கிய காமெடியன் சதீஷ், “ஹேர் ஸ்டைல் வேணும்னா சினேகன் மாதிரி இருக்கலாம்… ஆனா, மனசு ஓவியா மாதிரி” என்று கூறி எஸ்.ஜே.சூர்யாவைப் பேச அழைக்க, அரங்கம் முழுக்க கைதட்டலால் அதிர்ந்தது.
 
“இந்தியாவிலுள்ள மிகப்பெரிய இயக்குநர்களில் ஏ.ஆர்.முருகதாஸும் ஒருவர். அவர் படத்தில் நடிக்க பல ஹீரோக்கள் காத்திருக்கின்றனர். அதனால் தான் என்னிடம் நடிக்கக் கேட்டபோது, உடனே ஒப்புக் கொண்டேன். தமிழ் சூப்பர் ஸ்டாருக்கு ‘சந்திரமுகி’ போல, தெலுங்கு சூப்பர் ஸ்டாருக்கு ‘ஸ்பைடர்’ இருக்கும்” என்று பேசினார் எஸ்.ஜே.சூர்யா.