1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Suga)
Last Updated : ஞாயிறு, 10 செப்டம்பர் 2017 (13:10 IST)

‘இறுதிச்சுற்று’ இயக்குநர் படத்தில் சூர்யா!!

‘இறுதிச்சுற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கரா அடுத்து இயக்கும் படத்தில் சூர்யா நடிப்பது உறுதியாகியிருக்கிறது.


 
 
மாதவன், ரித்திகா சிங் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் ‘இறுதிச்சுற்று’. மாதவனுக்கு தமிழில் ரீஎன்ட்ரியாக அமைந்த இந்தப் படம், குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. 
 
இந்தப் படத்தைத் தெலுங்கில் ரீமேக் செய்த சுதா கொங்கரா, அடுத்து சூர்யாவை இயக்கப் போகிறார் என்றொரு தகவல் வெளியானது. அந்தத் தகவல், தற்போது உண்மையாகியிருக்கிறது. 
 
இந்தப் படத்துக்கு, ‘விக்ரம் வேதா’ படத்தில் அருமையான இசையால் ஈர்த்த சாம் சி.எஸ். இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சூர்யாவின் ‘2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
 
இதற்கிடையில், செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாகவும், அந்தப் படத்தில் ரகுல் ப்ரீத்சிங் ஹீரோயின் எனவும் ஒரு தகவல் பரவிக் கொண்டிருக்கிறது. இரண்டு படங்களில் எந்தப் படம் முதலில் ஷூட்டிங் ஆரம்பிக்கும் என்று தெரியவில்லை.