வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 8 மே 2019 (19:53 IST)

தயாரிப்பாளர் சங்கத்தின் முக்கிய பதவியில் பாரதிராஜா-எஸ்.வி.சேகர்: விஷால் அதிர்ச்சி

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக முறைப்படி தேர்தலில் வெற்றி பெற்று விஷால் பொருப்பை ஏற்ற நிலையில் திடீரென தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன் தயாரிப்பாளர் சங்கத்திற்கு என ஒரு தனி அதிகாரியை நியமனம் செய்து, இனிமேல் சங்கத்தின் அனைத்து முடிவுகளையும் தனி அதிகாரியே முடிவு செய்வார் என அறிவித்தது. இதனை எதிர்த்து விஷால் நீதிமன்றம் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று தனி அதிகாரி என்.சேகர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தயாரிப்பாளர் சங்கத்தின் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் ஒரு குழுவை அமைத்துள்ளதாகவும், அந்த குழுவில் ஒன்பது பேர் இடம்பெற்றுள்ளதாகவும் அறிவித்துள்ளார். இந்த ஒன்பது பேர் கொண்ட பட்டியலில் விஷாலுக்கு பிடிக்காத பாரதிராஜா, எஸ்.வி.சேகர் உள்பட ஒருசிலர் உள்ளனர் என்பதால் விஷால் தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
அந்த ஒன்பது பேர் கொண்ட குழுவின் பட்டியல் பின்வருமாறு
 
1. பாரதிராஜா
2. டி.ஜி.தியாகராஜன்
3. கே.ராஜன்
4. டி.சிவா
5. சிவசக்தி பாண்டியன்
6. எஸ்.வி.சேகர்
7. ஜே.எஸ்.கே.சதீஷ்குமார்
8. எஸ்.எஸ்.துரைராஜ்
9. ஆர்.ராதாகிருஷ்ணன்