வியாழன், 16 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 23 செப்டம்பர் 2024 (14:16 IST)

ஜமா படத்துக்கு இளையராஜாவுக்கு சம்பளம் கொடுக்கவில்லையா?... இயக்குனர் அளித்த பதில்!

‘கூழாங்கல்’ திரைப்படத்தை தயாரித்த Learn & Teach Productions, தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து 'ஜமா' என்ற திரைப்படத்தைத் தயாரித்தது.  இந்த படத்தை பாரி இளவழகன் எழுதி இயக்க, அவரோடு முக்கியக் கதாபாத்திரங்களில் சேத்தன் மற்றும் அம்மு அபிராமி ஆகியோர் நடித்திருந்தனர்.

படம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது. ஆனாலும் இந்த படம் வசூல் ரீதியாக வெற்றிப் பெறவில்லை. இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்தார். அவரின் பின்னணி இசை படத்துக்குப் பெரும்பலமாக அமைந்தது.

இந்நிலையில் இந்த படத்துக்கு இசையமைத்த இளையராஜா அதற்காக சம்பளமே பெற்றுக்கொள்ளவில்லை என்று ஒரு தகவல் பரவியது. அது சம்மந்தமாக பதிலளித்துள்ள இயக்குனர் பாரி இளவழகன் “அப்படியெல்லாம் இல்லை. யாரோ அதுபோல கிளப்பிவிட்டுவிட்டார்கள். அவருக்கு முறையாக சம்பளம் தயாரிப்பு நிறுவனம் மூலமாகக் கொடுத்துவிட்டோம்” எனப் பேசியுள்ளார்.