வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 9 பிப்ரவரி 2019 (12:19 IST)

”ஒரு நைட்டுக்கு ஒரு கோடின்னு” டிவீட் போட்டுட்டு பிளேட்டை மாற்றிய நடிகை

ஒரு நைட்டுக்கு ரூ. 1 கோடி தருகிறோம் எனக் கூறி சிலர் தன்னை அழைப்பதாக கூறிய நடிகை சாக்‌ஷி சவுத்ரி தற்போது அதனை மறுத்துள்ளார்.
 
பிரபல தெலுங்கு நடிகை சாக்‌ஷி சவுத்ரிக்கும் அரைகுறை ஆடையில் இருக்கும் தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு வந்தார்.
 
சமீபத்தில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “எனது வீடியோக்களையும் புகைப்படங்களையும் பார்த்து ஒரு இரவுக்கு ரூ.1 கோடி தருவதாக ஆபாச அழைப்பு விடுக்கின்றனர். அவர்கள் எல்லோரும் முட்டாள்கள். நான் விற்பனைக்கு உரியவள் அல்ல” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
 
இந்நிலையில் இதுகுறித்து பேசிய அவர் தான் அப்படி பதிவை போடவே இல்லை எனவும் அதனை தம் அட்மின் போட்டுவி்ட்டார் எனவும் விளக்கம் கொடுத்துள்ளார்.