செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 10 ஏப்ரல் 2024 (07:45 IST)

‘எல்லாத்துக்கும் காலமே பதில்’… சூரியை சந்தித்து சமாதானம் ஆன விஷ்ணு விஷால்!

நடிகர் சூரியை  நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ஏமாற்றி விட்டதாக காவல்துறையில் புகார் அளித்து அது சம்மந்தமான வழக்கு நிலுவையில் இருந்தது. விஷ்ணு விஷாலின் தந்தை மூலமாக அறிமுகமான நபர் ஒருவர் தனக்கு நிலம் வாங்கி தந்ததில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக சூரி குற்றச்சாட்டு வைத்தார். இதில் ரமேஷ் குடவாலாவும் உடந்தையாக இருந்து தன்னை ஏமாற்றி விட்டதாக சூரி குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.

இந்த பிரச்சனையால் விஷ்ணு விஷாலுக்கும் சூரிக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது. இருவரும் மாறி மாறி நேர்காணல் கொடுத்து தாக்கிப் பேசினர். இந்நிலையில் இந்த பிரச்சனை சுமூகமாக முடிந்துள்ளதாம்.

விஷ்ணு விஷால், ரமேஷ் குடவாலா மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் சந்தித்துள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ள விஷ்ணு “எல்லாவற்றுக்கும் காலமே பதில் சொல்லும்.” எனக் கூறியிருந்தார். அதைப் பகிர்ந்துள்ள சூரி “நடப்பவை எல்லாம் நன்றிக்கே… நன்றிங்க” எனக் கூறியுள்ளார்.