திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 14 ஆகஸ்ட் 2024 (14:11 IST)

கொட்டுக்காளி படத்தின் டைட்டிலில் எனக்கு உடன்பாடு இல்லை… இயக்குனர் மிஷ்கின்!

கூழாங்கல் படத்தை இயக்கிய பி எஸ் வினோத்ராஜ், தன்னுடைய இரண்டாவது படமான ‘கொட்டுக்காளி’ படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சூரி மற்றும் அன்னா பென் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மற்ற கதாபாத்திரங்களில் எல்லாம் புதுமுக நடிகர்கள் பலர் நடித்துள்ளனர்.

கடந்த ஒரு ஆண்டாக பல சர்வதேச திரைப்பட விழாக்களில்  கொட்டுக்காளி கலந்துகொண்டு பாராட்டுகளைப் பெற்றுள்ளது. ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இதையடுத்து இன்று படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டஇயக்குனர் மிஷ்கின் இயக்குனர் வினோத்ராஜை பாராட்டிப் பேசினார். அப்போது ‘இந்த படத்தின் தலைப்புக் கீழ் the adamant girl (பிடிவாதமான பெண்) எனப் போட்டுள்ளார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதற்குப் பதில The adamant society (பிடிவாதமான சமூகம்) எனப் போட்டிருக்கலாம்” எனக் கூறியுள்ளார்.