ரூ.2.70 கோடி மோசடி வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் கோரிக்கை வைத்த சூரி!

soori
சென்னை ஐகோர்ட்டில் கோரிக்கை வைத்த சூரி!
siva| Last Modified வெள்ளி, 16 அக்டோபர் 2020 (11:39 IST)
நடிகர் சூரியை தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மற்றும் விஷ்ணுவிஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா ஆகிய இருவரும் ரூ.2.70 கோடி ஏமாற்றியதாக சமீபத்தில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரில் மோசடி செய்யப்பட்ட தொகை ரூ.50 லட்சத்திற்கும் மேல் உள்ளதால் இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு சென்றுள்ளதாகவும்,
மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கை விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில் தற்போது சூரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திடீரென மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் தான் ஏற்கனவே அளித்திருந்த நில மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகர் சூரியின் கோரிக்கை ஏற்கப்பட்டு இந்த வழக்கு சிபிஐக்கு செல்லுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சூரியின் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது


இதில் மேலும் படிக்கவும் :