1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (13:08 IST)

”ஆகச்சிறந்த படைப்பு”… ரஜினியை அடுத்து சூரி பாராட்டிய லேட்டஸ்ட் தமிழ்ப்படம்!

விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியான டாணாகாரன் திரைப்படம் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‘டாணாக்காரன்’ திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் ஏப்ரல் 8 ஆம் தேதி ரிலீஸானது. இந்த படத்தை ஜெய்பீம் மற்றும் அசுரன் ஆகிய படங்களில் நடித்திருந்த வெற்றிமாறனின் உதவியாளர் தமிழ் இயக்கி இருந்தார். இந்த படம் வெளியாகிப் பரவலாக கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தைப் பார்த்த நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படக்குழுவினரை பாராட்டியுள்ளார். இது சம்மந்தமாக நடிகர் விக்ரம் பிரபு தன்னுடைய டிவீட்டில் ‘ சூப்பர் ஸ்டார் போன் செய்து டாணாக்காரனில் எனது நடிப்பைப் பாராட்டியது அற்புதமான நிகழ்வு. நான் கனவில் கூட நினைக்காத சாதனை இது. கனவுகளுக்கான முயற்சியில் இறங்கும்போது இப்படி அதிசயமான நிகழ்வுகள் நடக்கும்’ எனக் கூறியுள்ளார். கும்கி திரைப்படத்துக்கு பிறகு சரியான வெற்றிப்படம் கிடைக்காமல் விக்ரம் பிரபு போராடி வந்த நிலையில் தற்போது டாணாக்காரன் அவருக்கு திருப்புமுனையாக அமைந்துள்ளது.

ரஜினிக்குப் பிறகு இப்போது நடிகர் சூரி இந்த படத்தை ஆகச்சிறந்த படைப்பு எனப் பாராட்டியுள்ளார். அவரின் சமூகவலைதளப் பதிவில் ‘பெத்தவுகளுக்கு கூட பிள்ளைய அடிக்க உரிமையில்ல ஆனா போலீஸ்க்கு ஜனநாயகம் கையில் பிரம்பு தந்துருக்கு!பெத்தவரின் பொறுப்பு, வாத்தியாரின் கண்டிப்பு, நண்பனின் கனிவு ஒருசேர கடைபிடிக்கும் போலீசாருக்கெல்லாம் சல்யூட். ஆகச் சிறந்த படைப்பு” எனக் கூறியுள்ளார்.