வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 12 பிப்ரவரி 2020 (11:33 IST)

சூர்யாவுடன் விமானத்தில் பறக்கும் 100 மாணவர்கள்! – பருந்தாகுது ஊர்க்குருவி!

”சூரரை போற்று” படக்குழுவின் சார்பில் 100 அரசு பள்ளி மாணவர்கள் முதன்முறையாக விமானத்தில் பறக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் ‘சூரரை போற்று’. இந்த படத்தின் முதல் பாடல் தமிழ் சினிமாவிலேயே முதன்முறையாக நடுவானில் விமானத்தில் வெளியிட உள்ளார்கள். இதற்காக ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் போயிங் 737 விமானம் தயார் செய்யப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் பறக்கக்கூடிய அந்த விமானத்தில் ஸ்பெஷலாக இதுவரை விமானத்தையே பார்க்காத அரசு பள்ளி மாணவர்கள் 100 பேர் பயணிக்க உள்ளனர்.

இதுகுறித்து சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இதற்காக நடத்தப்பட்ட கட்டுரை போட்டியில் வெற்றிபெற்ற அரசு பள்ளி மாணவர்களை தேர்ந்தெடுத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. சாமானிய மாணவர்களும் சாதிக்க முடியும் என்று அவர்களை ஊக்கப்படுத்துவதற்கு இது உதவும் என கூறப்பட்டுள்ளது. சாதாரண மனிதர்களும் பறக்க முடியும் என இந்த கடிதத்தை வெளியிட்டுள்ள சூர்யா தனது படத்தின் கதாப்பாத்திரமான ‘நெடுமாறன் ராஜாங்கம்’ என்ற பெயரிலேயே இதை வெளியிட்டுள்ளார்.

அரசுப்பள்ளிகளில் உள்ள மாணவர்களை விமானத்தில் பறக்க வைத்ததன் மூலம் ‘பருந்தாகுது ஊர்க்குருவி’ என்ற பதத்தை சூர்யா நிசர்சனமாக்கி இருப்பதாக பலர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.