செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 20 டிசம்பர் 2020 (09:47 IST)

தனுஷை பத்தி அப்பவே சொன்னேன்… கலாய்ச்சிங்களேடா? கோபமான ஷான் ரோல்டன்!

நடிகர் தனுஷ் நெட்பிளிக்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் தி க்ரே மேன் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

The Gray Man எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், ரையான் கோஸ்லிங், க்ரிஸ் இவான்ஸ், ஜெஸ்ஸிகா ஹென்விக் மற்றும் அர்மா டி அனாஸ் உள்ளிட்ட ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடிக்கும் இந்தப் படத்தில், தனுஷும் நடிக்க உள்ளார். நெட்பிளிக்ஸின் மிகப் பிரம்மாண்டமான தயாரிப்பாக உருவாகும் இந்த படத்தின் அறிவிப்பை காலையில் நெட்பிளிக்ஸ் வெளியிட்டது. அதையடுத்து தனுஷுக்கு பல தரப்பிலும் இருந்து வாழ்த்து மழை பொழிந்தது. இதற்கு முன்னர் தனுஷ் 2018ல் வெளிவந்த The Extraordinary Journey of the Fakir படத்தின் மூலம் ஹாலிவுட்டிற்கு அறிமுகமானவர். The Gray Man அவரது இரண்டாவது ஹாலிவுட் திரைப்படமாக இருக்கும்.

இது குறித்து பலரும் அவருக்கு இப்போது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தனுஷின் ஆஸ்தான இசையமைப்பாளராக இப்போது இருக்கும் ஷான் ரோல்டன் 3 ஆண்டுகளுக்கு முன்பே ‘தனுஷை இந்தியாவின் லியானார்டோ டிகாப்ரியோ ‘ எனப் புகழ்ந்து ஒரு டிவீட்டை பகிர்ந்திருந்தார். அப்போது பலரும் அந்த டிவீட்டில் கமெண்ட் செய்து அவரைக் கலாய்த்திருந்தனர்.

இந்நிலையில் இப்போது தனுஷுக்கு ஹாலிவுட் வாய்ப்புக் கிடைத்துள்ள நிலையில் அந்த டிவீட்டை குறிப்பிட்டு ஷான் ரோல்டன் ‘நான் அப்ப சொன்ன போது கலாய்ச்சீங்களேடே சொம்பைகளா?’ எனக் கூறியுள்ளார்.