செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 5 செப்டம்பர் 2021 (12:08 IST)

சூர்யாவுக்கு வந்த பார்சல்: வைரல் வீடியோ

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவான சூரரைப்போற்று என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது என்பதும் இந்த படத்தை இன்னும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சமீபத்தில் இந்த திரைப்படம் மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டது என்றும் அதில் சிறந்த படம் சிறந்த நடிகர் ஆகிய விருதுகள் இந்த படத்திற்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக விருது பெற்ற அனைத்து திரைப்படங்களுக்கும் விருது பெற்ற கலைஞர்களுக்கும் பார்சலில் விருதுக் குழுவினர் அனுப்பி வைத்துள்ளனர்
 
அந்த வகையில் சூர்யாவுக்கு சூரரைப்போற்று படத்திற்காக கிடைத்த விருதுகள் பார்சலில் வந்துள்ளதால் அந்த பார்சலை சூர்யா பிரித்துப் பார்க்கும் வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது