ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 4 செப்டம்பர் 2021 (16:32 IST)

இந்தியில் சாதனைப் படைத்த ஜோதிகாவின் படம்!

'ராட்சசி' தமிழ்த் திரைப்படத்தின் இந்தி டப்பிங் படம் 200 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து பார்க்கப்பட்டுள்ளது.

இயக்குநர் கவுதம்ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள படம் ராட்சசி . இப்படத்தை டிரீம் வாரியர்ஸ் பிக்கர்ஸ் சார்பில், எஸ்.ஆர். பிரபு என்பவர் தயாரிகிறார். ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ராட்சசி திரைப்படம் தமிழில் நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

இந்நிலையில் இந்த படத்தின் இந்தி டப்பிங் மேடம் கீதா ராணி என்ற பெயரில் வெளியானது. இந்த படம் யுடியூபில் 200 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனைப் படைத்துள்ளது. இது கிட்டத்தட்ட விஜய் மற்றும் அஜித் படங்களுக்குக் கிடைக்கும் பார்வையாளர்களுக்கு நிகரானது.