செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 20 ஜனவரி 2021 (00:03 IST)

சோனு சூட் மக்களுக்கு புதிய சேவை...மக்கள் மகிழ்ச்சி

சோனு சூட் தொடங்கிவைத்த புதிய சேவையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா காலத்தில் மக்களுக்குத் தேவையான உதவிகள் செய்து மக்களின் மனதில் கடவுளாகவே  வாழ்த்து வருபவர் நடிகர் சோனு சூட்.

இந்நிலையில் சோனு சூட் புதிதாக ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கியுள்ளார். இந்த ஆம்புலன்ஸ் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள நோயாளிகளுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து சோனுவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் சோனு சூட் ஒரு கர்ப்பிணிப்  பெண்ணுக்கு உதவி செய்தார். எனவே அப்பெண் தனது குழந்தைக்கு சோனுவின் பெயரை சூட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.