ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 18 ஜூலை 2018 (17:29 IST)

கலாச்சார சீரழிவு ; பிக்பாஸ் பார்க்க வேண்டாம் : ஆனந்த் வைத்தியநாதன் ஒப்பன் டாக்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலாச்சார சீரழிவு இருப்பதாக நினைத்தால் நீங்கள் அந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டாம் என அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஆனந்த் வைத்தியநாதன் கூறியுள்ளார்.

 
பிக்பாஸ் 2வது சீசனில் கலந்து கொண்ட குரல் பயிற்சியாளர் ஆனந்த் வைத்தியநாதன் சில நாட்கள் அங்கிருந்து விட்டு அதன்பின் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.
 
இந்நிலையில், கோவையில் நடைபெற்ற ஒரு விழாவில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார். பிக்பாஸ் வீட்டில் உடல் அளவிலும், மன அளவிலும் கஷ்டப்பட்டேன் என தெரிவித்தார். 
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலாச்சார சீரழிவு இருப்பதாகவும், குடும்பத்துடன் பார்க்க முடியவில்லை எனவும் கருத்து எழுந்துள்ளதே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் “கலாச்சார சீரழிவு இருந்தால் குடும்பத்தோடு நிகழ்ச்சியை பார்க்க வேண்டாம். நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என யாரும் வற்புறுத்தவில்லை” என தெரிவித்தார்.