“கமல்ஹாசனால் மட்டுமே அது முடியும்” – துல்கர் சல்மான்
‘கமல்ஹாசனால் மட்டுமே அது முடியும்’ என முக்கியமான விஷயத்தைக் கூறியுள்ளார் துல்கர் சல்மான்.
பிஜோய் நம்பியார் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள படம் ‘சோலோ’. தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், ஷேகர், ருத்ரா, ஷிவா மற்றும் த்ரிலோக் என மொத்தம் 4 கேரக்டர்களில் நடித்துள்ளார் துல்கர் சல்மான். அவருக்கு ஜோடியாக 4 ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.
“ஒவ்வொரு கேரக்டரின் லுக், நடிப்பு… அவ்வளவு ஏன், நடை கூட வித்தியாசமாக இருக்கும். 4 கேரக்டர்களுக்கும் என்ன வேண்டும் என்பதில் இயக்குநர் தெளிவாக இருந்தார். வேறு வேறு இடங்களில், நேரங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. ஆனால், ஒரே நேரத்தில் 4 கேரக்டர்களில் நடிப்பது என்பது கஷ்டமான காரியம். கமல்ஹாசனால் மட்டுமே அது முடியும்” எனத் தெரிவித்துள்ளார் துல்கர் சல்மான்.