திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 1 பிப்ரவரி 2018 (17:56 IST)

சமூக வலைதளங்களில் வைரலாகும் சூர்யாவின் மகன் புகைப்படம்

நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். இன்றுவரை இவர்கள் அனைவராலும் ரசிக்கப்படும் நட்சத்திர  தம்பதியாக விளங்கி வருகின்றனர்.
இவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். இதில் மகன் தேவ்வின் புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி  வருகிறது.
 
ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே 'கடைக்குட்டி சிங்கம்' என்ற படப்பிடிப்பு தளத்தில் நடிபெற்ற மாபெரும் ரேக்ளா பந்தயத்தை காண்பதற்காக  சூர்யாவின் மகன் வந்திருந்தான். மகனுடன் சூர்யா ரேக்ளா காட்சியை பார்வையிடும் புகைப்படம் வெளியானது. அதில் சூர்யாவின் மகன் முகத்தை மறைத்து  கொண்டு பார்ப்பது போலவும், அதனை தனது மொபைலில் படம் பிடிப்பது போ இருந்தது. தற்போது சமூக வலைதளங்களில் சூர்யா மகன் தேவ் புகைப்படம்  வெளியாகி வைரலாகி வருகிறது.