ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 23 டிசம்பர் 2017 (11:40 IST)

ஸ்கெட்ச் படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்; ப்ரொமோ வீடியோ

விஜய் சந்தர் இயக்கம், விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் படம் 'ஸ்கெட்ச்'. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் விக்ரம் நீண்ட இடைவேளைக்கு பிறகு கமர்ஷியல் படத்தில் நடித்து வருகின்றார்.
நடிகர் விக்ரம் 'இருமுகன்' படத்திற்கு பிறகு 'துருவ நட்சத்திரம்', 'ஸ்கெட்ச்', 'சாமி 2' ஆகிய படங்களில் நடித்துவருகிறார். அவர் நடித்திருக்கும் இந்த மூன்று படங்களுமே அடுத்த வருடம் வெளியாகும் நிலையில் தான் உள்ளன. 'இருமுகன்' படம் கடந்த வருடம் வெளியானது.
 
இந்நிலையில் விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம்-தமன்னா ஜோடியாக நடித்துள்ள ஸ்கெட்ச் படக்குழு ரசிகர்களுக்கு நேற்று இரவு  சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். தமன் இசையமைத்துள்ள பாடலின் ப்ரொமோ நேற்று இரவு வெளியானது. 'அட்சி புட்சி ஸ்கெட்ச்' பாடலின் ப்ரொமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
 
'ஸ்கெட்ச்' படத்தின் 'அட்சி புட்சி ஸ்கெட்ச்' பாடல் சிங்கிள் ட்ராக் வரும் டிசம்பர் 25-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.