1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By C.M.
Last Updated : வெள்ளி, 22 டிசம்பர் 2017 (20:48 IST)

விக்ரமின் போலீஸ் டீமில் இணைந்த உமா ரியாஸ்

விக்ரம் நடிக்கும் ‘சாமி ஸ்கொயர்’ படத்தில், பெண் போலீஸாக நடிக்கிறார் உமா ரியாஸ்கான்.
ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் படம் ‘சாமி ஸ்கொயர்’. ஏற்கெனவே வெளியான ‘சாமி’ படத்தின் இரண்டாம்  பாகமாக இது தயாராகி வருகிறது. கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்க, பாபி சிம்ஹா வில்லனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் இருந்து த்ரிஷா விலகியது குறிப்பிடத்தக்கது.
 
இந்தப் படத்தில், விக்ரம் டீமில் இருக்கும் போலீஸ் அதிகாரிகளில் ஒருவராக உமா ரியாஸ்கான் நடித்துள்ளார். இவர் ஏற்கெனவே அருள்நிதி நடிப்பில் வெளியான ‘மெளன குரு’ படத்தில் போலீஸாக நடித்தவர். ‘இந்தப் படத்துக்குப் பிறகு நான் விஜயசாந்தி லெவலுக்கு வருவேன்’ என்கிறார் உமா ரியாஸ்கான்.