1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (16:22 IST)

தனுஷை பாராட்டிய கன்ண்ட சூப்பர் ஸ்டார்!

நடிகர் தனுஷ் சிறப்பான படங்களை தேர்வு செய்து நடிப்பதாக கன்னட நடிகர் சிவராஜ்குமார் பாராட்டியுள்ளார்.

கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் சிவராஜ்குமார். இவர் முந்தைய கன்னட சூப்பர் ஸ்டாரான ராஜ்குமாரின் இளைய மகன் ஆவார். இப்போது தமிழ் இயக்குனர் விஜய் மில்டன் இயக்கும் பைராகி படத்தில் நடித்து வருகிறார். இது சம்மந்தமான ஒரு நேர்காணலில் தனக்கு தமிழ் சினிமா கலைஞர்களோடு பணியாற்றுவது மிகவும் பிடிக்கும் எனக் கூறியுள்ளார்.

அதில் ‘கமல்சாரின் தீவிர ரசிகன் நான். அவரின் படங்களை எல்லாம் முதல்நாளே நான் பார்த்துவிடுவேன். தற்போது நடிகர் தனுஷ் மிகச்சிறப்பான படங்களை செய்து வருகிறார். தற்போது தமிழ் சினிமாவை தொடர்ச்சியாக கவனித்து வருகிறேன்’ எனக் கூறியுள்ளார்.