வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 8 மார்ச் 2019 (08:45 IST)

சிவப்பு மஞ்சள் பச்சை: மூன்று பிரபலங்கள் இணையும் படத்தின் டைட்டில்

நடிகர்கள் ஜிவி பிரகாஷ், சித்தார்த் மற்றும் இயக்குனர் சசி ஆகிய மூன்று பிரபலங்கள் இணையும் படத்தின் டைட்டில் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு 'சிவப்பு மஞ்சள் பச்சை' என வைக்கப்பட்டுள்ளதால் இதுவொரு டிராபிக் சம்பந்தப்பட்ட படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த படத்தில் சித்தார்த் ஏற்கனவே டிராபிக் போலீஸ் அதிகாரியாக நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது இந்த டைட்டில் அதனை உறுதி செய்வது போல்தெரிகிறது
 
ரமேஷ் பிள்ளை தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் இம்மாதத்திற்குள் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்து அடுத்த மாதம் முதல் தொழில்நுட்ப பணிகள் ஆரம்பமாகும் என்றும் கூறப்படுகிறது. 
 
மேலும் இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் ஒரு விளையாட்டு வீரர் கேரக்டரில் நடித்து வருவதாகவும், ஜிவி பிரகாஷின் சகோதரியை சித்தார்த் காதலிப்பது போன்று இந்த படத்தின் கதை செல்வதாகவும் கூறப்படுகிறது