1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 19 மே 2020 (12:33 IST)

அனுவை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்: யார் இந்த அனு?

நடிகர் சிவகார்த்திகேயன் அனு என்னும் வெள்ளை புலியை மேலும் 4 மாதங்களுக்கு கூடுதலாக தத்தெடுத்துள்ளார். 
 
சென்னை வண்டலூர் பூங்காவில் விலங்கு தத்தெடுப்பு திட்டபடி, விலங்குகளின் உணவு மற்றும் பராமரிப்பு செலவை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளலாம். இந்த திட்டத்தில் வருமான வரி விலக்கு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும். 
 
இந்த பூங்காவில் உள்ள 14 வெள்ளைப்புலிகளில் ஒன்றாக அனு என்ற புலியை நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இப்போது மே மாதத்தில் இருந்து மேலும் நான்கு மாதங்களுக்கு இந்த தத்தெடுப்பை நீட்டித்துள்ளார்.