வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: புதன், 11 அக்டோபர் 2017 (12:16 IST)

சிவாஜி கணேசனுக்கு மரியாதை செய்த சிவகார்த்திகேயன்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை சமீபத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவுக்கு கமல், ரஜினி உள்பட திரையுலகினர் பெருந்திரளாக குவிந்திருந்தனர்.



 
 
இந்த நிலையில் சிவாஜி கணேசனின் மணிமண்டபத்திற்கு திரையுலகினர்களும் பொதுமக்களும் நாள்தோறும் சென்று வருகின்றனர். 
 
அந்த வகையில் இன்று நடிகர் சிவகார்த்திகேயன் சிவாஜி மண்டபத்திற்கு சென்று மணிமண்டபம் முன் வைக்கப்பட்டிருந்த சிவாஜி கணேசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.