1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (16:57 IST)

கோயிலுக்குச் சென்ற சிவகார்த்திகேயன்..வைரலாகும் போட்டோ

நடிகர் சிவகார்த்திகேயன் பிரபல கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘டான்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

சமீபத்தில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் கொரோனா விதிமுறைகளை மீறி நோய் தொற்று பரவும் வகையில் அதிக அளவிலான ஆட்கள் கூடக் காரணமாக இருந்ததால்

டான் படக்குழுவினருக்கு வருவாய்த் துறையினர் 19400 ரூபாய் அபராதம் விதித்து, படக்குழுவினர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இது பரபரப்பாகப் பேசப்பட்டது.,

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் மாசாணி அம்மன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

மேலும், நடிகர் சிவகார்த்திகேயன் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் 5 படங்களில் நடிக்க ஒப்பந்தம் போட்டுள்ளதாகத்தகவல் வெளியாகும் நிலையில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.