வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 7 நவம்பர் 2024 (15:01 IST)

நெப்போலியனிடம் வருத்தம் தெரிவித்த நடிகர் சிவகார்த்திகேயன்!

தமிழ் சினிமாவில் 90 களில் வில்லனாக அறிமுகமாகி பிறகு கதாநாயகனாக உச்சம் தொட்டு மீண்டும் குணச்சித்திர வேடத்துக்கு மாறிக் கலக்கியவர் நெப்போலியன். தனது மகனின் உடல்நிலை மற்றும் அதன் சிகிச்சைக் காரணமாக இப்போது அமெரிக்காவில் தங்கி வருகிறார்.

இதனால் அவர் தனக்கு வந்த பல வாய்ப்புகளை இழந்துள்ளார். ஆனால் அங்கு சென்று இதுவரை நான்கு ஹாலிவுட் படங்களில் நடித்துமுடித்துள்ளார். இந்நிலையில் தமிழ் சினிமாவுடன் இருக்கும் தொடர்பு விடுபட்டு போய்விட கூடாது என்பதற்காக ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு படங்கள் தமிழில் நடிக்கிறார்.

இந்நிலையில் அவரின் மூத்த மகன் தனுஷுக்கு திருநெல்வேலியைச் சேர்ந்த அக்‌ஷிதா என்ற பெண்ணோடு ஜப்பானில் திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்தில் தமிழ் சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் “நெப்போலியன் சார், என்னுடைய கடினமான காலங்களில் நீங்கள் என் கூட இருந்துள்ளீர்கள். உங்கள் மகன் கல்யாணத்தில் நான் கூட இருந்து எல்லா வேலைகளையும் செய்திருக்கணும்.  அதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். தனுஷ் தம்பிக்கு என்னுடைய வாழ்த்துகள். இந்த திருமணம் உங்க மனது மாதிரியே நல்ல படியா நடக்கட்டும். விரைவில் உங்களை வந்து சந்திக்கிறேன் சார்” எனக் கூறியுள்ளார்.