புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 23 டிசம்பர் 2021 (19:21 IST)

’பீஸ்ட்’ சிங்கிள் புரமோ: சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’பீஸ்ட்’ படத்தின் சிங்கிள் பாடல் ப்ரோமோ வீடியோ உடன் வரும் புத்தாண்டு அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது என்றும் இந்த படப்பிடிப்பில் விஜய், அனிருத், நெல்சன் மற்றும் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டதாகவும் கூறப்பட்டது 
ஆனால் தற்போது வந்துள்ள தகவலின்படி இந்த புரோமோ விடியோ படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் கலந்து கொள்ளவில்லை என்றும் விஜய், அனிருத் மற்றும் நெல்சன் மட்டுமே கலந்து கொண்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது
 
இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இருப்பினும் இந்த வீடியோ நகைச்சுவையாக ரசிகர்களுக்கு நல்ல என்டர்டைன்மென்ட் தரும் வகையில் இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்