சிவகார்த்திகேயனின் " மிஸ்டர் லோக்கல் " : லேட்டஸ்ட் அப்டேட்ஸ் இதோ..!
சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் படம் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
குட்டி குழந்தைகளின் பிரியமான நடிகர் சிவகார்த்திகேயன் ‘மிஸ்டர். லோக்கல்’ என்ற படத்தில் நடித்துவருகிறார். ராஜேஷ். எம் இயக்கும் இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார்.
மேலும் இப்படத்தில் ராதிகா ,சதிஷ் ,தம்பி ராமையா , எரும சாணி ஹரிஜா என நட்சத்திர பட்டாளமே இருக்கிறது . ஹிப்- ஹாப் தமிழா ஆதி இசையமைக்கும் இப்படத்தின் இசையமைக்கிறார். இதையடுத்து இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் சமீபத்தில் வெளியான நிலையில் மிஸ்டர் லோக்கல் என்ற படத்தின் டைட்டில் அனைவரையும் ஈர்த்துள்ளது.
இயக்குனர் ராஜேஷ் படங்கள் என்றாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது. அதுமட்டுமின்றி நகைச்சுவையில் மாஸ் கிளப்பும் சிவகார்த்திகேயன் நடித்தால் காமெடிக்கு கொஞ்சமும் குறைவிருக்காது. ஆக இப்படம் குழந்தைகள் மட்டுமின்றி ஃபேமிலி ஆடியன்ஸையும் தியேட்டருக்கு வரவைக்கும் எனபதில் சந்தேகமில்லை.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள செய்தி என்னவென்றால், இறுதி கட்ட படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாகிறதாம் மற்றும் போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகளும் தயார் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. ஆக மிகவிரைவில் நாம் சிவகார்த்திகேயனை திரையில் பார்க்கலாம்.