செவ்வாய், 9 ஜூலை 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 12 பிப்ரவரி 2024 (10:24 IST)

’எஸ்.கே.21’ படத்தின் சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட ராஜ்கமல் பிலிம்ஸ்.. ரசிகர்கள் குஷி..!

சிவகார்த்திகேயன் நடித்து வரும் 21வது திரைப்படமான எஸ்.கே 21 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.  

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மிகவும் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்த நிலையில்  அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னை உள்பட பல நகரங்களில் நடந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்று மாலை ஐந்து மணிக்கு இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்த வீடியோ ஒன்றையும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Edited by Mahendran