செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (17:47 IST)

சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ பர்ஸ்ட் சிங்கிள் எப்போது? படக்குழு அறிவிப்பு!

prince
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அனுதீப் இயக்கத்தில் தமன் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘பிரின்ஸ்’ 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இறுதிகட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன
 
இந்த நிலையில் இந்த படம் வரும் தீபாவளி அன்று ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் அன்புசெல்வன் ரிலீஸ் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் வரும் செப்டம்பர் 1-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிவகார்த்தியன் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் ஜோடியாக உக்ரைன் நாட்டின் நடிகை மரியா நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது