புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 13 டிசம்பர் 2019 (20:38 IST)

’ஹீரோ’ படம் குறித்து கல்யாணி பிரியதர்ஷனின் வேண்டுகோள்!

’ஹீரோ’ திரைப்படத்திற்கு நாங்கள் எதிர்பார்த்தது கிடைத்துள்ளதாக இப்படத்தின் நாயகி கல்யாணி பிரியதர்ஷன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார் 
 
சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் உருவான ஹீரோ திரைப்படத்தின் டிரைலர் இன்று காலை வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இந்த டிரைலரை கொண்டாடி வருகின்றனர். ஆக்சன் கிங் அர்ஜுனின் வித்தியாசமான கேரக்டர் அனைவரையும் கவரும் என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர் 
 
இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் குறித்த தகவல்கள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யூ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். சிவகார்த்திகேயனின் முந்தைய படங்கள் அனைத்துமே யூ சான்றிதழ் பெற்றுள்ள நிலையில் இந்த படமும் யூ சான்றிதழ் பெற்று சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கும் தகுதி உடைய படமாக உருவாகியுள்ளது 
 
இந்த நிலையில் இந்த படத்தின் நாயகி கல்யாணி பிரியதர்ஷன் தனது டுவிட்டரில் கூறியபோது ’ஹீரோ படத்திற்கு ’யூ’ சான்றிதழ் கிடைக்கும் என்பது எங்களுக்கு ஏற்கனவே தெரியும் என்றும் இந்த படம் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் தகுதியான படம் என்றும் வரும் டிசம்பர் 20ஆம் தேதி அனைவரும் குடும்பத்துடன் தியேட்டரில் வந்து இந்த படத்தை பாருங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டது அடுத்து வரும் டிசம்பர் 20ஆம் தேதி இந்தப் படம் வெளியாகும்போது 100% உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
சிவகார்த்திகேயன், அர்ஜூன், கல்யாணி பிரியதர்ஷன், இவானா, ஷ்யாம் கிருஷ்ணன், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படம் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.