செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 2 நவம்பர் 2021 (14:00 IST)

ரூ.100 கோடி வசூல் க்ளப்பில் இணைந்தது டாக்டர்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ திரைப்படம் ரூபாய் 100 கோடி வசூல் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ திரைப்படம் கடந்த மாதம் 9ஆம் தேதி வெளியானது என்பது இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஆயுத பூஜை அன்று திரைக்கு வந்த அரண்மனை 3 உள்ளிட்ட ஒரு சில படங்களின் வசூலையும் அதற்கு முன்பே வந்த ’டாக்டர்’ திரைப்படம் முந்தியது என்பது கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படம் 90 கோடி ரூபாய் வசூல் செய்த சிவகார்த்திகேயன் படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த படத்தை தயாரித்த கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் சற்று முன் தனது டுவிட்டர் பக்கத்தில் ’டாக்டர்’ திரைப்படம் ரூபாய் 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ’டாக்டர்’ குழுவினர் மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதற்கு முன்னர் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் திரைப்படம் 88 கோடி ரூபாய் வசூல் செய்தது அதிகபட்ச வசூல் ஆக இந்த நிலையில் தற்போது முதல் முறையாக அவருடைய ’டாக்டர்’ திரைப்படம் ரூபாய் 100 கோடி வசூல் செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது