1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : வியாழன், 13 மே 2021 (15:05 IST)

’டாக்டர்’ படத்தின் ரன்னிங் டைம், சென்சார் தகவல் இதோ!

சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ திரைப்படம் ரிலீசுக்கு ஏற்கனவே தயாராக இருந்த நிலையில் இந்த படத்தின் சரியான ரிலீஸ் தேதியை எப்போது உறுதி செய்வது என படக்குழுவினர் காத்திருக்கின்றனர். ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டு இருப்பதால் மீண்டும் எப்போது திரையரங்குகள் திறக்குமோ, அப்போதுதான் இந்த படம் ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது
 
ஒரு சிலர் இந்த படம் ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக வதந்திகளை கிளப்பி கொண்டிருந்தாலும் இந்த படம் திரையரங்குகளில் தான் ரிலீஸாகும் என படக்குழுவினர் தரப்பில் இருந்து உறுதியான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ’டாக்டர்’ திரைப்படம் சென்சார் ஆகி வந்துள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 148 நிமிடங்கள் என செய்திகள் வெளியாகி உள்ளது 
 
நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது