சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த பெரும் கவுரவம்

VM| Last Updated: புதன், 9 ஜனவரி 2019 (10:49 IST)
பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் இயக்குனராக அவதாரம் எடுத்த கனா படம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.
கிரிக்கெட் மற்றும் விவசாயத்தை ஒரே புள்ளியில் இணைத்து இயக்கி இருப்பார் அருண்ராஜா. சாதாரண பெண் கிரிக்கெட் வீராங்கணையாக வர போராடுகிறார். அவர் வென்றாரா என்பதே கதை. ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் நடித்த இந்த கதை போராடும் பலருக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் இருக்கும். இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தனது எஸ்கே புரொடக்ஷன் மூலம் தயாரித்து இருந்தது. 
 
இந்நிலையில் நார்வேயில் நடந்து வரும் 10வது சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த தயாரிப்பு நிறுவனமாக சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தயாரித்த முதல் படமே சிவகார்த்திகேயனுக்கு சிறந்த பெயரை பெற்று கொடுத்துள்ளது கனா.


இதில் மேலும் படிக்கவும் :