திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 13 மே 2022 (23:35 IST)

சிவகார்த்திகேயன் படம் இணையதளத்தில் லீக்...படக்குழு அதிர்ச்சி

don siva1
நடிகர் சிவகார்த்திகேயன்  நடிப்பில் இன்று வெளியான டான் படம் இணையதளங்களில்  வெளியானதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் இன்று  வெளியாகியுள்ள படம் டான். இப்படத்திற்கு நல்ல வரவேற்பு  கிடைத்துள்ளதால் படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது.

இந்த நிலையில், சினிமா படங்களை  பதிவிறக்கம் செய்யும் சில பைரஸி இணையளத்தில் டான் படம் வெளியாகிவிட்டது. இது  படக்குழுவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதனால் இப்படத்தை இணையதளங்களில் பார்க்காமல், தியேட்டரில் பார்க்கும்படி படக்குழுவினர் கூறியுள்ளனர்.