வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 28 ஆகஸ்ட் 2021 (16:03 IST)

அண்ணன் இனிமெ ஹீரோதானா? சிவகார்த்திகேயன் வாழ்த்து!

நடிகர் சிவகார்த்திகேயன் சூரிக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

நடிகர் சூரி தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை கலைஞர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இப்போது வெற்றி மாறன் படத்தில் கதாநாயகனாகவும், இயக்குனர் ராம் இயக்கும் படத்தில் முக்கிய வேடத்திலும் நடிப்பதால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. நேற்று சூரியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் சூரியின் நெருங்கிய கதாநாயகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் ‘எதிர் நீச்சல் அடி… ஆள் செம்மயா இருக்கீங்க அண்ணே. இனிமே புல்லா ஹீரோதான. சங்கத்துக்கு நாங்க வேற செயலாளர தேடணும் போல இருக்கே. என் அன்பான அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். லவ் யு அண்ணன்’ என பாராட்டியுள்ளார். சமீபகாலமாக சூரி சில படங்களில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகி வருவதை குறிப்பிட்டு அவர் இப்படி வாழ்த்தியுள்ளார்.