கௌதம் மேனன், சிவகார்த்திகேயன் படத்தை உறுதி செய்த தயாரிப்பாளர் மகள்!
சிவகார்த்திகேயன் நடிப்பில் கௌதம் மேனன் படத்தினை ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இயக்குனர் கௌதம் மேனன் பல கோடி கடன் பிரச்சனைகளில் சிக்கி தவித்து வந்தார். அந்த சமயத்தில் அவருக்குக் கை கொடுத்தவர் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். தொடர்ந்து அவருக்கு வாய்ப்புக் கொடுத்து வருகிறார் கணேஷ். இப்போது சிம்பு நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார் கௌதம் மேனன். இந்நிலையில் அடுத்ததாக ஐசரி கணேஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தையும் கௌதம் மேனனையே இயக்க ஒப்பந்தம் செய்துள்ளாராம். விரைவில் இந்த வினோத கூட்டணி பற்றிய அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.
இந்த செய்தி புரளியாக இருக்கும் என சொல்லப்பட்ட நிலையில் இப்போது அதை ஐசரி கணேஷின் மகள் உறுதி செய்து தனது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.