வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 6 செப்டம்பர் 2024 (07:22 IST)

விஜய் ரசிகர்கள் GOAT திரைப்படத்திற்கு BOAT -ல் புதுவித யுத்தியில் விளம்பரம்..

தளபதி விஜய் அரசியலுக்கு அடி எடுத்து வைத்துள்ள சூழலில் விஜயின்  கோட் திரைப்படம் வெளியாகி உள்ளது.
 
இந் நிலையில் கன்னியாகுமரியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கோட் திரைப்படத்திற்கு,
இதுவரை எவரும் சிந்தித்துக் கூட பார்த்திராத புதிய யுத்தியாக மீன் பிடி படகின் இருபக்கங்களிலும். கோட் திரைப்படத்தில் விஜயின் வெவ்வேறு தோற்றங்களான விளம்பர சுவரொட்டி களை படகில் ஒட்டி கடலில் மீன் பிடிக்க சென்றனர்.
 
கன்னியாகுமரியில் வாவத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த ஒருவரின் நாட்டு படகில் கோட் திரைப்படத்தில் விஜயின் வெவ்வேறு தோற்றங்களான விளம்பரத்துடன் கடலில் மீன் பிடிக்க பயணம் மேற்கொண்டது குமரியில் பொது மக்களின் பார்வையில் புதுமையாக இருந்தது.
 
கடலில் படகு பயணத்தில் கோட் திரப்பட விளம்பர நிகழ்வுக்கு.குமரி மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் சிவா தலைமையில் நடந்த படகு பயணத்தில்.
 
குமரி பேரூராட்சி விஜய் மக்கள் இயக்க தலைவர் ஜோ முன்னிலை வகித்தார். 
 
கடற் கரையிலிருந்து கடலுக்குள் படகில் சென்றவர்களை. படகு நிறைய மீன்களுடன் வாருங்கள் என கரையில் நின்ற மீனவ மக்கள் கை அசைத்து வாழ்த்தி
அனுப்பினார்கள்.