படப்பிடிப்பில் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடிய சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் திரைப்படத்தின் ஷூட்டிங் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படப்பிடிப்பின் போது இயக்குனர் மடோன் அஸ்வினுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே கருத்து மோதல் ஆரம்பம் முதலே உருவாகி வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அதைப் படக்குழு முற்றிலுமாக மறுத்துள்ளது. தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று சிவகார்த்திகேயன் தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு படப்பிடிப்புத் தளத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அப்போது படத்தில் வில்லனாக நடிக்கும் மிஷ்கின் மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் அவரை வாழ்த்தியுள்ளனர். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.