ஞாயிறு, 25 பிப்ரவரி 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 18 ஜூன் 2021 (15:13 IST)

ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்குகிறாரா சிம்பு?

நடிகர் சிம்பு சின்னத்திரையில் ஒரு ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்க உள்ளாராம்.

சமீபகாலமாக நடிகர்கள் சின்னத்திரை மற்றும் வெப் சீரிஸ்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். மிகப்பெரிய நடிகரான கமல்ஹாசனே பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி, இளம் நடிகர்களுக்கு ஊக்க மருந்து போல செயல்பட்டார். இதையடுத்து விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்களும் இப்போது அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளனர். இதையடுத்து இப்போது சிம்புவும் ஜி தொலைக்காட்சியில் நடக்க உள்ள ரியாலிட்டி ஷோ ஒன்றை தொகுத்து வழங்க உள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் அதை சிம்பு தரப்பு மறுத்துள்ளதாம்.