ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 10 அக்டோபர் 2018 (12:42 IST)

அனு என்ற "பெண் புலியை" தத்தெடுத்த சிவகார்த்திகேயன்!

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து நடிகர் சிவகார்த்திகேயன் 6 மாதத்திற்கு அனு என்ற ஒரு வெள்ளை பெண் புலியை தத்தெடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களுள் ஒருவரான சிவகார்த்திகேயன். சமீபத்தில் சீமராஜா படத்தில் நடித்திருந்தார். அந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் ராஜேஷ் மற்றும் ரவிக்குமார் இயக்கத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். 
 
இந்த நிலையில், சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து அனு என்ற ஒரு வெள்ளை நிற பெண் புலியை 6 மாத காலத்திற்கு தத்தெடுத்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். இது தொடர்பான கடிதத்தையும் உயிரியல் பூங்கா இயக்குனர் எஸ்.யுவராஜ்ஜிடம் கொடுத்துள்ளார். 
 
மேலும், தத்தெடுக்கும் நிகழ்ச்சிக்காக ரூ.2.12 லட்சம் கொடுத்துள்ளார். இது பற்றி  சிவகார்த்திகேயன் கூறியது, விலங்குகளை பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் தலையாய கடமை. 174 வகை இனங்களில் ஒன்றை பொதுமக்கள் தாமாக முன் வந்து தத்தெடுக்கவேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இதையடுத்து, வண்டலூர் உயிரியல் பூங்காவின் அதிகாரிகள் கூறுகையில், தத்தெடுக்கும் நிகழ்ச்சியின் மூலம், இங்குள்ள விலங்குகளை யார்வேண்டுமானாலும் தத்தெடுக்கலாம். 
விலங்கு, பறவை, ஊர்வனம்  என ஏதாவது ஒன்றை தத்தெடுப்பதன் மூலம் பூங்காவில் தினந்தோறும் நடக்கும் தூய்மைப்படுத்துதல் மற்றும் பாலூட்டுதல் போன்றவற்றில் பங்கேற்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்  என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.