திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 11 செப்டம்பர் 2018 (11:23 IST)

சென்றாயனுக்கு சிம்பு கொடுத்த சர்ப்ரைஸ் பரிசு

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த பல வாரங்களாகவே மக்களுக்கு விரோதமாகவே நடந்து வருகிறது. கடந்த வாரம் ஐஸ்வர்யாவை காப்பாற்றிய பிக்பாஸ், சென்றாயனை பலிகடா ஆக்கியது இந்த சீசனின் மன்னிக்க முடியாத தவறு. ஐஸ்வர்யாவையும், யாஷிகாவை கடைசி வரை கொண்டு செல்ல வேண்டும் என்று முதலிலேயே முடிவு செய்துவிட்ட பிக்பாஸ் நடத்தும் தில்லுமுல்லுகளின் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் சென்றாயனின் வெளியேற்றம்

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்த சென்றாயன், நேற்று மகத் வீட்டு சென்றார். அங்கு அவருக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருந்தது. மகத்தின் வீட்டில் சிம்புவும் இருந்தார். மகத் வெளியே வந்ததும் அவரை அடித்து வரவேற்ற சிம்பு, சென்றாயனை கட்டிப்பிடித்து வரவேற்றார்.

பின்னர் திருமூலர் எழுதிய திருமந்திரம் புத்தகத்தை சென்றாயனுக்கு தனது அன்புப்பரிசாக அளித்தார். சிம்புவின் வர்வேற்பாலும், பரிசாலும் சென்றாயன் நெகிழ்ந்துவிட்டதாக தெரிகிறது. சென்றாயன் பிக்பாஸ் டைட்டிலை வெல்லாவிட்டாலும் மக்களின் மனதை வென்றுவிட்டதால் அவர்தான் இந்த சீசனின் மக்களின் வெற்றியாளர் என்பது குறிப்பிடத்க்தக்கது.