1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 17 ஜூலை 2020 (09:41 IST)

கண்ணதாசன் உங்களை அடிப்பார்: சிவகார்த்திகேயனின் காமெடி டுவீட்

சிவகார்த்திகேயன் நடிப்பில் அனிருத் இசையில் நெல்சன் இயக்கத்தில் ’டாக்டர்’ திரைப்படம் உருவாகி வருகிறது என்பதும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு லாக்டவுன் ஊரடங்கு முடிந்தவுடன் தொடங்கும் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் நேற்று இந்த படத்தின் சிங்கிள் பாடலான செல்லம்மா’ என்ற பாடல் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயன் எழுதிய இந்த பாடலை அனிருத் மற்றும் ஜோனிதா காந்தி ஆகியோர் பாடியுள்ளனர். இந்த பாடல் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது
 
இந்த நிலையில் இந்த பாடலை பாராட்டி கண்ணதாசனின் பேரனும் நடிகருமான ஆதவ் கண்ணதாசன் தனது டுவிட்டரில் கூறியபோது ’சிவகார்த்திகேயன் பயங்கரமான கவிஞராக மாறிவிட்டார் என்று வாழ்த்து தெரிவித்திருந்தார். மேலும் அனிருத் மற்றும் நெல்சனுக்கும் அவர் பாராட்டு தெரிவித்திருந்தார்கள் 
 
ஆதவ் கண்ணதாசனின் பாராட்டு குறித்து டுவிட்டரில் பதிவு செய்த சிவகார்த்திகேயன் ’தயவு செய்து என்னை எல்லாம் கவிஞர் என்று சொல்லாதீங்க. அப்படி சொன்னால் தாத்தா கண்ணதாசன் உங்க கனவுல வந்து அடிப்பாங்க’ என்று காமெடியாக டுவிட் பதிவு செய்துள்ளார். இந்த இரண்டு டுவிட்டுகளும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது