1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 9 ஜூலை 2024 (11:39 IST)

பிரபல பாப் பாடகி உஷா உதுப் வீட்டில் நிகழ்ந்த சோகம்.. திரையுலகினர் இரங்கல்..!

usha

பிரபல பாப் பாடகி உஷா உதுப் அவர்களின் கணவர் காலமானதாக வெளிவந்திருக்கும் செய்தியை அடுத்து அவருக்கு திரையுலகினர் ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்திய திரையுலகின் பிரபல பாப் பாடகி உஷா உதூப் கணவர் ஜானி ஜாக்கோ திடீரென மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 78 .இன்று கொல்கத்தாவில் அவருடைய இறுதிச் சடங்கு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் உஷா உதுப் கடந்த பல ஆண்டுகளாக வசித்து வரும் நிலையில் நேற்று காலை அவரது கணவர் ஜானி ஜாக்கோ வழக்கம்போல் குடும்பத்தினருடன் உணவருந்தி உள்ளார். அதன்பின் உஷா வெளியே கிளம்பி சென்ற நிலையில் திடீரென அவர் கணவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

அவரது வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  மேலும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர்.இதனை அடுத்து உஷா குடும்பத்தினருக்கு திரை உலக பிரபலங்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். 

Edited by Siva