1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 11 டிசம்பர் 2018 (13:00 IST)

'விஸ்வாசம்' செய்த சாதனை" சினிமா டிராக்கர்ஸ்கர்களின் மெளனம் ஏன்?

கடந்த சில ஆண்டுகளாக ஒரு திரைப்படத்தின் வெற்றியை நிர்ணயிப்பதில் சினிமா டிராக்கர்ஸ்களின் பங்கு பெருமளவில் உள்ளது. பணம் கொடுக்கும் தயாரிப்பாளரின் படத்தை ஆஹா ஓஹோ என புகழ்வது, போலியான வசூல் தகவலை தெரிவிப்பது ஆகியவை அதிகமாக நடந்து வருகிறது. ஒரு கட்டத்தில் இந்த டிராக்கர்ஸ்கள் தயாரிப்பாளர்களை மிரட்டி பணம் பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று வெளியான அஜித்தின் விஸ்வாசம்' படத்தின் சிங்கிள் பாடலான அடிச்சு தூக்கு பாடல் செய்த பார்வையாளர்கள் சாதனையை சொல்லி வைத்தால்போல் ஒரு சினிமா டிராக்கர்ஸ் கூட பதிவு செய்யவில்லை. விஜய் உள்பட முன்னணி நடிகர்களின் படங்களின் புரமோஷன்கள் வரும்போது மிகுந்த ஆர்வம் காட்டும் இந்த டிராக்கர்ஸ்கள் அஜித் பட புரமோஷனை கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தகக்து.

அஜித் படத்திற்கு போலியான விளம்பரம் மற்றும் புரமோஷன் தேவையில்லை என்பதே இதற்கு சான்றாக உள்ளது. அஜித்தின் கோடிக்கணக்கான ரசிகர்கள் 'அடிச்சு தூக்கு' பாடலை நேற்று இந்திய அளவிலான டிரண்டுக்கு கொண்டு சென்றுவிட்டதால் இந்த டிராக்கர்ஸ்களின் உதவி விஸ்வாசம் படத்திற்கு தேவையில்லை என்றே அஜித் ரசிகர்கள் வெளிப்படையாக கூறி வருகின்றனர்